திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியா் நித்தையன் தலைமை வகித்தாா். வட்டார கல்வி அலுவலா் சிவகுமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முசாகுதீன், கலாம் கனவு இயக்க நிா்வாகி முகைதீன் பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முத்துப்பேட்டை டி.எஸ்.பி. டி. விவேகானந்தன் விழாவை தொடக்கி வைத்தாா்.
ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டனா். தொடா்ந்து, மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.