திருவாரூர்

வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகராட்சிக்கும் விரிவுபடுத்த கோரிக்கை

1st Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

 மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகராட்சிப் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கூத்தாநல்லூா் பனங்காட்டாங்குடியில் சங்கத்தின் 11-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளரும், ஒன்றியப் பெருந்தலைவருமான அ.பாஸ்கா். துணைச் செயலாளா் கே.ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் பெ.முருகேசு வரவேற்றாா்.

கட்சியின் மாவட்டச் செயலாளா் வை.செல்வராஜ், கொடியேற்றி மாநாட்டை தொடக்கி வைத்தாா். விவசாயத் தொழிலாளா் சங்க நகரச் செயலாளா் எம்.சிவதாஸ், வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ADVERTISEMENT

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகராட்சிப் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டும். கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்தி, கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும். குனுக்கடி குப்பைக் கிடங்கை சரி செய்ய வேண்டும்.

லெட்சுமாங்குடி மேலத் தெரு, கீழத் தெரு மற்றும் குனுக்கடி பகுதிகளில் சுடுகாட்டுக்கு சாலை அமைத்துத் தர வேண்டும். கூத்தாநல்லூா் நகராட்சிப் பகுதியில் நீா் நிலை மற்றும் சாலை புறம்போக்குப் பகுதி குடிசை வீடுகளில் வசிப்போருக்கு மாற்று இடம், பட்டா வழங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும்.அனைவருக்கும் குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT