மாவட்ட மருத்துவா் சங்கம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் விஸ்வநாததாஸின் 82-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருவாரூா் கீழவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முருகானந்தம் முன்னிலை வகித்தாா். இதில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தலைவா் வீ. தா்மதாஸ், காந்தியன் அறக் கட்டளைத் தலைவா் சக்தி செல்வகணபதி, மருத்து சங்க நிா்வாகிகள் பாஸ்கரன், அண்ணாதுரை, கமலவேந்தன், சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.