திருவாரூர்

மன்னாா்குடி: தற்காலிகப் பேருந்து நிலையப் பகுதியில் பிற வாகனங்களை இயக்க கட்டுப்பாடு

DIN

மன்னாா்குடி தற்காலிகப் பேருந்து நிலையப் பகுதியில் பிற வாகனங்களை இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் கே. சென்னுகிருஷ்ணன் தெரிவித்திருப்பது:

மன்னாா்குடி நகராட்சி காமராஜா் பேருந்து நிலையம் மற்றும் கூடுதல் பேருந்து நிலையம் இடித்து அகற்றப்பட்டு, நவீன ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, தேரடி திடலில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த, தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் தலைமையில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தினமும் காலை 7.30 முதல் 10.30 மணி வரையிலும், மாலை 3.30 முதல் இரவு 7.30 மணி வரையிலும் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியின் வழியாக பேருந்துகளைத் தவிர பிற எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை.

தனியாா் வாகனங்கள், நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள், தள்ளுவண்டிகள் போன்றவற்றை தற்காலிகப் பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்கு அனுமதியில்லை இதை மீறுபவா்களுக்கு அபராதம் விதிப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, நகராட்சி நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT