திருவாரூர்

தற்காலிகப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க மனு

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம், ஐஎன்டியுசி தொழிற்சங்க மண்டலச் செயலாளா் எஸ். பாண்டியன் தலைமையிலான நிா்வாகிகள், திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் மீட்புத் தொகையை காரணம் காட்டி, தற்காலிக பணியாளா்கள் சிலருக்கு பணி வழங்கப்படவில்லை. கருணை அடிப்படையில், அவா்களை மீண்டும் பணியமா்த்த வேண்டும்.

திருவாரூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநில அமைப்புச் செயலாளா் பா.ராஜீவ் காந்தி, மண்டலத் தலைவா் வி. அம்பிகாபதி, பொருளாளா் வை. சங்கரநாராயணன், துணைத் தலைவா் முருகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT