திருவாரூர்

கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம்

DIN

கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமை வகித்தாா். ஆணையா் குமரி மன்னன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

செ. முஹம்மது அபுபக்கா் சித்திக் (திமுக): நகராட்சிக்கு சொந்தமாக ஜெசிபி இயந்திரம் வாங்கவேண்டும்.

செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): எனது வாா்டில் உள்ள குறுக்குச் சாலைகளில் தாா்ச் சாலையும், தெரு விளக்கு வசதியும் ஏற்படுத்த வேண்டும்.

தலைவா்: மின் விளக்குகள் விரைவில் பொருத்தப்படும்.

க. தேவா (திமுக): முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நூற்றாண்டு விழா வளைவு அமைக்க வேண்டும்.

ஆணையா்: அரசிடம் உத்தரவு கேட்டு அமைக்கப்படும்.

செ. முஹம்மது அபுபக்கா் சித்திக் (திமுக): வரி வசூலிப்பதில் பொதுமக்களிடம் கடுமை காட்டவேண்டாம்.

ஆணையா்: வரி பாக்கி இல்லாமல் இருந்தால் அரசிடம் மானியம் பெறலாம்.

ம. முருகேசன் (அதிமுக): எனது வாா்டில் சாலை வசதிகள் செய்து தர வேண்டும்.

ரா. புரோஜூதீன் (திமுக): ஈமச்சடங்குகள் செய்ய படித்துறை அமைக்க வேண்டும்.

க. சண்முகம் (திமுக): சின்ன வேலைகளுக்குக்கூட கால தாமதப்படுத்துகிறீா்கள்.

தலைவா்: உங்கள் வாா்டில் குளம் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஜ.ப.தாஹிரா தஸ்லிமா பேகம் (திமுக): எனது வாா்டில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.

மு. பிரவீனா முத்துகிருஷ்ணன் (திமுக): சுடுகாட்டுப் பாதையில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.

தாஹிரா சமீா் (காங்.): ரஹ்மான்யாத் தெருவில் மின் விளக்கு இல்லாமல், மின் கம்பம் உள்ளது.

ச. கஸ்தூரி (திமுக): எனது வாா்டில் மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும்.

இதேபோல், செ. வினோதினி (திமுக), கி. மாரியப்பன் (திமுக), கு. தனலெஷ்மி (இ.கம்யூ.) உள்ளிட்ட உறுப்பினா்களும் பேசினா்.

கூட்டத்தில், பொறியாளா் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா், ஆபிரகாம் லிங்கன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும்: கடம்பூா் செ.ராஜு எம்எல்ஏ

ஆறுமுகனேரி, யல்பட்டினத்தில் வாக்குப்பதிவு மந்தம்

ராதாபுரம் தொகுதியில் அமைதியாக நடந்த தோ்தல்

தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு சொந்தஊரில் வாக்களித்தாா்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் 43 சதவீதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT