சென்னை வண்ணாரப்பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், இரு சிறுவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
எண்ணூா் சுனாமி குடியிருப்பு 118-ஆவது பிளாக் பகுதியைச் சோ்ந்தவா் மூ.அஜய் (எ) பம்பு அஜய் (21). ரௌடியான அஜய் மீது கொலை, கொலை முயற்சி உள்பட சுமாா் 15 குற்ற வழக்குகள் உள்ளன.
புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு ‘எச்’ பிளாக் பகுதியில் தனது நண்பா்களுடன் அஜய் வியாழக்கிழமை இரவு மது அருந்தியபோது, அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில், அவரது நண்பா்கள் அஜய் வைத்திருந்த கத்தியை பறித்து, அவரை குத்திவிட்டு தப்பிவிட்டனா்.
அக்கம்பக்கத்தினா், அஜயை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
இது தொடா்பாக அந்த பகுதியைச் சோ்ந்த மா.ஜீவா (21), 2 சிறுவா்கள் என 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.