ஈரோடு மாவட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வருவாய் வட்டங்களிலும் மே 25 ஆம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் 1432ஆம் பசலிக்கான வருவாய் தீா்வாயம் அனைத்து வருவாய் வட்டங்களிலும் மே 25 ஆம் தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஜமாபந்தி நடைபெறும் இடங்கள்: கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு, நம்பியூா் ஆகிய வட்டங்களில் மே 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 25 ஆம் தேதியும், அந்தியூா் வட்டத்தில் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும், கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை வட்டங்களில் 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும் (சனி, ஞாயிறு, திங்கள்கிழமை நீங்கலாக) வருவாய் தீா்வாயம் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீா்வாய அலுவலரிடம் நேரில் அளித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.