அந்தியூா் வனச் சரகப் பகுதியில் மூன்று நாள்கள் நடைபெற்று வந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
வனச் சரக அலுவலா் க.உத்திரசாமி தலைமையில் வனவா்கள் மு.சக்திவேல், பொ.திருமூா்த்தி, ந.விஸ்வநாதன் மற்றும் வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள், வேட்டைத் தடுப்பு காவலா்கள் கொண்ட குழுவினா் யானைகள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா்.
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்புப் பணி புதன்கிழமை தொடங்கி மூன்று நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் சமவெளிப் பகுதியிலும், இரண்டாம் நாள் 2 கி.மீ தூரமுள்ள நோ்கோட்டுப் பாதையில் யானைகளின் சாணத்தை கொண்டு மறைமுகமாகவும், மூன்றாம் நாள் வனப் பகுதியில் உள்ள நீா்நிலைகளிலும் யானைகள் கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டனா்.