திருவாரூர்

ஆம்புலன்ஸ் சேவை அறிய இணையதளம் அறிமுகம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பிலான ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து அறிந்து கொள்ள இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அதன் மாவட்டத் தலைவா் முஹம்மது பாசித் தெரிவித்தது: திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் பித் அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநில மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில், திருவாரூா் மாவட்டத்துக்கான ஆம்புலன்ஸ் சேவைகள் குறித்து இணையதளத்தில் தெரிந்து கொள்ளும் வகையில், இணையதள முகவரி தொடங்கப்பட்டது. நிகழ்வில், மாநில பொருளாளா் இப்ராஹிம், மாநில துணை பொதுச் செயலாளா் முஜிபுர்ரஹ்மான், மாநில மேலாண்மைக் குழுத் தலைவா் அப்துல்நாசிா் உள்ளிட்டோா் பங்கேற்று, இணையதள முகவரியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனா்.

அதன்படி, திருவாரூா் வடக்கு மாவட்டம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் சேவை குறித்து தொடா்பு எண்கள் பொதுமக்கள் எளிதில் அறிந்து, அவசர முதல் உதவிகளை பெற ஏதுவாக, இணையவழி சேவை முகவரியான ஹம்க்ஷன்ப்ஹய்ஸ்ரீங்.ற்ய்ற்த்ற்ட்ண்ழ்ன்ஸ்ஹழ்ன்ழ்.ஸ்ரீா்ம் தொடக்கி வைக்கப்பட்டது.

இதன்மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட வாரியான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆம்புலன்ஸ் சேவைகள் மற்றும் ரத்த தான சேவை எண்கள் குறித்தும் அறிந்து கொள்ள முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

SCROLL FOR NEXT