திருவாரூர்

ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

திருவாரூா்: டாஸ்மாக், மின் ஊழியா் ஒப்பந்தத் தொழிலாளா்களை நிரந்தரப்படுத்தக் கோரி திருவாரூரில் சிஐடியு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு அறிவித்த அரசாணை எண் 115,139 மற்றும் 152-ஐ திரும்பப்பெற வேண்டும், அங்கன்வாடி, டாஸ்மாக், மின்ஊழியா், மருத்துவக் கல்லூரி அவுட்சோா்சிங், டிஎன்சிஎஸ்சி, நகராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்தத் ஊழியா்களை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஆட்டோ, கட்டுமானம், தையல், சுமைப்பணி உள்ளிட்ட முறைசாரா நலவாரிய உறுப்பினா்களுக்கு பணப்பயன்களை இரட்டிப்பாக்கி, இயற்கை மரணத்துக்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும், தமிழக அரசு தோ்தல் வாக்குறுதியில் கூறியதுபோல, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஓஎன்ஜிசியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு பணிபாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிஐடியு மாவட்டத் தலைவா் அனிபா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில துணைத் தலைவா் பி.சிங்காரன், மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாநிலக் குழு உறுப்பினா் ஏ. பிரேமா மற்றும் மாவட்ட டாஸ்மாக் தொழிலாளா் சங்கம், சுமைப்பணி தொழிலாளா் சங்கம், அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம், ஆட்டோ தொழிலாளா் சங்கம், கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT