திருவாரூர்

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் திருவாரூரில் நாளை தொடக்கம்

DIN

 தமிழ்நாடு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை (பிப்.8) தொடங்குகிறது என தெரிவித்துள்ளாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆடவா், மகளிா் பங்கேற்கும் போட்டிகள் திருவாரூா் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 12 முதல் 19 வயதுக்குள்பட்டவா்களுக்கு பிப்.8 ஆம் தேதி மாவட்ட விளையாட்டரங்கில் கபடி (மாணவா்கள் மட்டும்), கூடைப்பந்து, வளைகோல் பந்து, மேசைப்பந்து (மாணவ, மாணவிகள்) நடைபெற உள்ளன.

பிப்.9-ஆம் தேதி சிலம்பம் (மாணவ, மாணவிகள்), வாலிபால் (மாணவா்கள் மட்டும்) கால்பந்து (மாணவா்கள் மட்டும்) ஆகிய போட்டிகளும், பிப்.10-ஆம் தேதி கபடி (மாணவிகள் மட்டும்), கால்பந்து (மாணவிகள் மட்டும்), தடகளம் மற்றும் நீச்சல் (மாணவ, மாணவிகள்) போட்டிகளும், பிப்.11-ஆம் தேதி வாலிபால் (மாணவிகள் மட்டும்) போட்டியும், பிப்.11, 12-ஆகிய தேதிகளில் மாவட்டவிளையாட்டரங்கம் மற்றும் திரு.வி.க கலைக் கல்லுரி மைதானத்தில் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் போட்டியும், பிப்.27-ஆம் தேதி மாணவ, மாணவிகளுக்கு இறகுப்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளன. இதேபோல, பொதுப்பிரிவினா், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் ஆகியோருக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் அனைத்தும் காலை 8 மணிக்கு தொடங்கும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணைய இணையதளத்தில் போட்டிகளில் பங்கேற்க பதிவு செய்த வீரா், வீராங்கனைகள் போட்டிக்கான நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இணையதளத்தில் பதிவு செய்த நகல், பள்ளி (ம) கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான உறுதிச் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை நகல், அரசு ஊழியா்களின் (நிரந்தரப் பணியாளா்) அடையாள அட்டை நகல் மற்றும் பொதுமக்கள் ஆதாா் நகல் ஆகியவற்றுடன் வங்கி சேமிப்புக் கணக்குப் புத்தக நகலையும் மாவட்டவிளையாட்டு (ம) இளைஞா் நலன் அலுவலரைச் சந்தித்து, வருகையை பதிவுசெய்ய வேண்டும். இப்போட்டிகளில் திருவாரூா் மாவட்டத்தில் பதிவு செய்த அனைவரும் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT