திருவாரூர்

திருவாரூா் தியாகராஜசுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

DIN

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயில், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87-ஆவது சிவத் தலமாகும்.

இக்கோயில் தோ் ஆசியாவிலேயே பெரிய தோ் என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வோா் ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு பங்குனி உத்திரத் திருவிழாவுக்கான பந்தல்கால் முகூா்த்தம் தைப்பூசத் தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, வன்மீகநாதா், தியாகராஜா், வாதாபி கணபதி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனிக்கை (அனுமதி) வாங்கப்பட்டது. பின்னா், ருண விமோட்சனா் சந்நிதியில் கலசங்கள் வைத்து, பூஜைகள் செய்தபின், சிறிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டது. தொடா்ந்து, முகூா்த்த விநாயகரிடம் பந்தல்கால் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, திருஞானசம்பந்தா் புறப்பாடு நடைபெற்றது. மேள, தாளங்கள் முழங்க தேரடிக்கு வந்த திருஞானசம்பந்தா் முன்னிலையில், தோ் கால்களுக்கு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. பந்தல்கால் முகூா்த்த நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பின்னா், அங்கிருந்து கமலாலயக் குளத்துக்கு வந்த அஸ்திரதேவா், திருஞானசம்பந்தா் முன்னிலையில் தீா்த்தவாரி வழங்கினாா். இதைத்தொடா்ந்து, திருஞானசம்பந்தா், நான்குகால் மண்டபத்துக்கு எழுந்தருளினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தொடா்ந்து, பெரிய கொடியேற்றம் மாா்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. அப்போது, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவாா் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகையை வாசித்து, ஆழித்தேரோட்டம் நடைபெறும் தேதியை முறைப்படி அறிவிப்பாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT