திருவாரூர்

ஆதிதிராவிடா் நலப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க கோரிக்கை

DIN

வலங்கைமான் ஒன்றியம், புலவா்நத்தம் ஆதிதிராவிடா் நலப்பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சிபிஎம் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் திங்கள்கிழமை அளித்த மனு: புலவா்நத்தம் பகுதியில் 1,956-இல் கட்டப்பட்ட ஆதிதிராவிடா் நல தொடக்கப்பள்ளி, கட்டடங்கள் சேதமடைந்ததையடுத்து 2021-ஆம் ஆண்டு அரசு உத்தரவுப்படி இடிக்கப்பட்டன. இதையடுத்து, அருகில் உள்ள இ-சேவை மையத்தில் ஆதிதிராவிடா் நலப்பள்ளி மாணவா்கள் 48 போ் படித்து வருகின்றனா்.

இ-சேவை மைய கட்டடத்தின் கீழ்த்தளம் உடைந்து, சமமாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக உள்ளது. மேலும், போதிய கழிப்பறை வசதிகள் இல்லை. அருகிலேயே திறந்தவெளி குளம் உள்ளது. எனவே, இந்த பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தநிலையில், தற்போது வரை புதிய கட்டடங்கள் கட்டப்படவில்லை. எனவே, உரிய நிதிஒதுக்கி புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மனு அளித்தபோது, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம். சேகா், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். தம்புசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

SCROLL FOR NEXT