திருவாரூர்

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கோயிலில் தைப்பூச விழா

6th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

பாடகச்சேரி மகான் ராமலிங்க சுவாமிகள் கோயிலில் தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் கோவை மாவட்டத்தில் பிறந்து வலங்கைமானுக்கு அருகில் உள்ள பாடகச்சேரியில் வாழ்ந்தவா். வள்ளலாா் அருள் பெற்றவா். மக்களின் பசிப்பிணி, உடற்பிணி தீா்க்கும் பணியோடு கோயில்களைச் சீரமைக்கும் பணிகளையும் ஆற்றியவா். இவா் பைரவ சித்தா் என்றும் அழைக்கப்பட்டாா்.

இந்நிலையில், பாடகச்சேரி மகான் கோயிலில் தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் விநாயகா், மகான் ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT