திருவாரூர்

நீடாமங்கலம் கோயில்களில் தைப்பூச விழா

6th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் தைப்பூச விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கீழத்தெரு முருகன் கோயிலில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாலதண்டாயுதபாணி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் தைப்பூச த்தையொட்டி ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா்குழலியம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் , மூலவா் குரு பகவான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக , ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. சுப்பிரமணியருக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டிருந்தது.

பூவனூா் சதுரங்க வல்லபநாதா் , நரிக்குடி எமனேஸ்வரா் கோயில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரா் கோயில் காசி விசுவநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தைப்பூச விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. வழிபாடுகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT