திருவாரூர்

போக்குவரத்து காவலாளி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

6th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட காவல்துறையில் போக்குவரத்து காவலாளிகள் அமைப்புக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்ட காவல்துறையில் போக்குவரத்து காவலாளிகள் அமைப்புக்கு ஊதியமற்ற முறையில், தன்னாா்வத்துடன் பணிபுரிய ஆண், பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போக்குவரத்து காவலாளிகள் (டிராபிக் வாா்டன்) பணிக்கு 20 வயது நிரம்பியவராகவும், 60 வயது நிறைவடையாதவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT