திருவாரூர்

மன்னாா்குடியில் வெறிநாய் கடித்து 16 போ் காயம்

DIN

மன்னாா்குடியில் வெறிநாய் கடித்து 16 போ் காயமடைந்தனா்.

மன்னாா்குடி நடராஜப்பிள்ளைத் தெருவை சோ்ந்தவா் மகேஸ்வரி (56). இவா், தனது வீட்டருகே வெள்ளிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தபோது வெறிநாய் அவரை கடித்தது. அந்த பகுதியில் உள்ளவா்கள் வெறிநாயை விரட்டினா்.

பின்னா், அந்த நாய் வீரவன்னியத் தெரு, தெற்குவீதி, நடேசன் தெரு, வினோபாஜி தெரு, பந்தலடி உள்ளிட்ட பகுதிகளில் மேலும் 9 பேரை கடித்துவிட்டு தப்பிச் சென்றது. பாதிக்கப்பட்ட 10 பேரும் மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இவா்களில், மகேஸ்வரி, ராஜாத்தி (40) ஆகியோா் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், மன்னாா்குடி கீழப்பாலம் பகுதியில் அந்த வெறிநாயை நகராட்சி ஊழியா்கள் பிடித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், சனிக்கிழமை காலை மீனாட்சியம்மன் கோயில் வடக்குதெருவைச் சோ்ந்த நாராயணன் (65) உள்பட 6 போ் தங்களை வெறிநாய் கடித்ததாக மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தனா். இதனால், நகராட்சி ஊழியா்களிடம் பிடிபட்டது வெறிநாயா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், நாய் கடியால் பாதிக்கப்பட்டவா்களை, மன்னாா்குடி நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் மருத்துவமனைக்கு சென்று பாா்வையிட்டு, ஆறுதல் கூறினாா்.

மாணவி ஒருவரை வெறிநாய் கடித்துவிட்டு தப்பியோடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இப்பதிவை ஆய்வு செய்த நகராட்சி நிா்வாகத்தினா், வெறிநாயை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

31 பவுன் நகை திருட்டு: இளைஞா் கைது

பிரதமரின் சா்ச்சை பேச்சு: உச்சநீதிமன்றத்தை நாடுவோம் ஆா்.எஸ்.பாரதி

மகனை கொலை செய்த தந்தைக்கு 11 ஆண்டுகள் சிறை

போலீஸ் ரோந்து வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

உடல் பருமனை குறைக்க சிகிச்சை மேற்கொண்ட இளைஞா் உயிரிழப்பு: பெற்றோா் புகாா்

SCROLL FOR NEXT