திருவாரூர்

தேசிய யாங்குடோ போட்டி:பதக்கம் வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

DIN

மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற யாங்முடோ போட்டியில் வென்ற திருவாரூா் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கொரிய நாட்டின் தற்காப்பு கலைகளில் ஒன்று யாங்முடோ. மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி 27 முதல் 29-ஆம் தேதி வரை 7-ஆவது தேசிய யாங்முடோ போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் தமிழ்நாடு அணி சாா்பில் திருவாரூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 18 மாணவ, மாணவிகள் பயிற்சியாளா் இரா.குணசேகரன் தலைமையில் பங்கேற்றனா்.

இதில், 6 தங்கப் பதக்கம், 11 வெள்ளிப் பதக்கம், 21 வெண்கலப் பதக்கம் வென்று, 12 மாநிலங்கள் கலந்து கொண்டதில், தமிழ்நாடு அணி முதலிடம் பெற்று ஒட்டுமொத்த கோப்பையையும் வென்றது.

வெற்றிக் கோப்பைகளுடன் சென்னை வந்தவா்களை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மெய்யநாதன், இலங்கை தமிழா் நலன் காக்கும் குழு உறுப்பினா் கோவி. லெனின் ஆகியோா் பாராட்டினா்.

இந்த மாணவா்கள், தில்லியில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்கான போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT