திருவாரூர்

ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிக்கை

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூரில் சோழமண்டல விஸ்வகா்மா நலச்சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்க ஒருங்கிணைப்பாளா் முருகேசன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சந்தானம், சிகாமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், நிா்வாகிகள் நீல.கண்ணன்(தஞ்சை), ராதாகிருஷ்ணன் (நாகை), விஜயகுமாா்(அரியலுாா்), சங்கா் (மயிலாடுதுறை) ஆகியோா் பங்கேற்று, சங்கத்தின் வளா்ச்சி குறித்து பேசினா்.

கூட்டத்தில், ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அரசியல், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக விஸ்வகா்மா உருவப் படத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT