திருவாரூர்

வளாக நோ்காணல்: 50 மாணவா்களுக்கு பணியாணை

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடியை அடுத்த இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் வளாக நோ்காணல் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் தலைவா் ஏ. ராஜகுமாரி அய்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். செங்கல்பட்டு மேக்னா ஆட்டோமேட்டிவ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை அலுவலா் மாதவன் நோ்காணல் நடத்தினாா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் 50 பேருக்கு வேலைவாய்ப்புக்கான அழைப்பு கடிதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி விரிவுரையாளா்கள் ராமமூா்த்தி, வெற்றிச்செல்வி, திவ்யா, ஜஸ்டின் அந்தோணிராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் மணிகண்டன் வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் அரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT