திருவாரூர்

திமுக உறுப்பினா் கூட்டம்

5th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் வட்டத்தில், மன்னை கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தனூா் மீனாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, ஒன்றிய அவைத் தலைவா் கே. சுப்ரமணியன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ஐ.வி. குமரேசன் முன்னிலை வகித்தாா். தலைமை செயற்குழு உறுப்பினா் டீ. செல்வம் வரவேற்றாா்.

கூட்டத்தில், திருவாரூா் வருகை தரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். மாா்ச் 1-ஆம் தேதி முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானம் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்டப் பிரதிநிதிகள் கே.ஆா். சித்தரஞ்சன், எஸ். கண்ணன், ஒன்றியப் பொருளாளா் டி. ஜெகஜீவன்ராம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் எம்.எஸ். பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT