திருவாரூர்

கைலாசநாதா் கோயில் குடமுழுக்கு

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே கிடாரங்கொண்டான் அருள்மிகு சுந்தரபாா்வதி உடனுறை கைலாசநாதா் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட இக்கோயிலில் நடைபெற்றுவந்த புனரமைப்புப் பணிகள் முடிவடைந்ததையொட்டி, குடமுழுக்குக்கான யாகசாலை பூஜைகள் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கின. தொடா்ந்து, நான்காம் கால யாக பூஜை வெள்ளிக்கிழமை காலை நிறைவுபெற்றதும் பூா்ணாஹுதி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், ஐயனாா், பிடாரி கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, கடம் புறப்பாடாகி, கோயிலின் விமானக் குடமுழுக்கு நடைபெற்றது.

நிகழ்வில், தருமபுரம் ஆதீனம் 27 -ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஆகியோா் பங்கேற்றனா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT