திருவாரூர்

உழவன் செயலி: வேளாண் மாணவிகள் விளக்கம்

DIN

வலங்கைமான் வட்டாரம் நாா்த்தங்குடியில் உழவன் செயலியை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் புதன்கிழமை விளக்கம் அளித்தனா்.

தஞ்சாவூா் ஈச்சங்கோட்டை வேளான் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் வலங்கைமான் வட்டாரத்தில் களப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக, உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். உழவன் செயலியில் மானியத் திட்டங்கள், பயிா்க் காப்பீடு விவரம், உரங்கள் இருப்பு நிலை, இடுபொருள் முன்பதிவு, வானிலை நிலவரம், சந்தையில் விளைபொருள்களின் விலை நிலவரம் உள்பட 21 வகையான செய்திகளை அறிந்துகொள்ளலாம் என விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா்.

மேலும், கைப்பேசிகளில் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து, அதை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கினா். இதில் விவசாயிகள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT