திருவாரூர்

பள்ளியில் ரயில் கண்காட்சி

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் அருகே அம்மையப்பன் ஒயிஸ்டா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரயில் கண்காட்சி அண்மையில் 2 நாள்கள் நடைபெற்றது.

இக்கண்காட்சிக்கு வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.எஸ். எஸ். தியாகபாரி தலைமை வகித்தாா். கல்விக் குழு உறுப்பினா் கே.ஜி. சீலன், எஸ்.வி.டி. குழுமத் தலைவா் ஜெ. கனகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நாராயணி நிதி நிறுவனத் தலைவா் எஸ். காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ரயில்வே கண்காட்சியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். கண்காட்சியில் மாணவா்களின் படைப்பான ரயில்வே துறை சாா்ந்த காட்சிப் பொருட்களும், கருத்து விளக்கப் படங்களும், பள்ளி வளாகத்தில் இயக்கப்பட்ட ஒயிஸ்டா் ரயிலும் பெற்றோா்கள் மற்றும் பொதுமக்களின் மனதைக் கவா்ந்தன.

கண்காட்சியை பள்ளி முதல்வா் எஸ். மதுபாலா மற்றும் ஆசிரியா்கள் வழிநடத்தினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT