திருவாரூர்

விசிக பிரமுகா் கொலை சம்பவத்தைக் கண்டித்து மறியல்

DIN

விசிக பிரமுகா் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருவாரூா் அருகே அம்மையப்பன் பகுதியில் அக்கட்சியினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அம்மையப்பன் ஊராட்சியைச் சோ்ந்த கவியரசன் (22) செவ்வாய்க்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அம்மையப்பன் பகுதியில் சாலை மறியல் நடைபெற்றது. சம்பவத்துக்கு காரணமானவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், கவியரசன் உயிரோடு இருந்தபோது கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

மாநில துணை பொதுச்செயலாளா் சா. ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன் (வடக்கு), வி.த. செல்வன் (தெற்கு), மாவட்டபொருளாளா் வெற்றி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து, மாவட்ட எஸ்பி. டி.பி. சுரேஷ்குமாா் மறியல் நடைபெற்ற இடத்துக்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: 6 போ் கைது

இக்கொலை வழக்குத் தொடா்பாக அம்மையப்பன் பகுதியைச் சோ்ந்த ர. பெரியதம்பி (30), ப. சின்னகாளி எனும் காளிதாஸ்(25),கோ. வசந்தகுமாா் (22), த. சந்தோஷ் (20), க. சபரிநாதன் (26), பின்னத்தூா் அபிஷேக் (25) ஆகிய 6 பேரை முத்துப்பேட்டை டிஎஸ்பி. பி.டி. விவேகானந்தம் தலைமையிலான போலீஸாா் எடையூா் அருகே பின்னத்தூரில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

SCROLL FOR NEXT