திருவாரூர்

புதிய வகுப்பறை கட்டடங்களுக்கு அடிக்கல்

DIN

தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்டம் காட்பாடியில், பேராசிரியா் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, குழந்தைநேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் 36 மாவட்டங்களில் 2,381 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிக் கட்டடங்களுக்கு புதன்கிழமை காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.

இதில், திருவாரூா் அருகே தண்டலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரூ. 33.48 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகளை கட்டடங்கள் அடங்கும்.

இதற்காக திருவாரூரில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.சந்திரா, மாவட்ட ஊராட்சித்தலைவா் கோ.பாலசுப்ரமணியன், வருவாய் கோட்டாட்சியா் சங்கீதா, முதன்மைக் கல்வி அலுவலா் விஜயா, வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்டிகள் 370: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடத் தயார்: ரோஹித் சர்மா

இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய யுவன்: 'கோட்' பாடல் காரணமா?

ஒடிசா: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT