திருவாரூர்

நிதிநிலை அறிக்கை: விவசாயிகளுக்கு பயனளிக்காது

DIN

நிதிநிலை அறிக்கை விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி தெரிவித்தது: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் வருமான வரிவிலக்கு ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 7 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு பொறுப்பேற்றபோது, வேளாண்மை உற்பத்தி மும்மடங்கு, விவசாயிகளின் வருமானம் இருமடங்காக்குவோம் என்று அறிவித்தது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு இல்லை.

கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகள் போராடிய நிலையில், மத்திய அரசு உறுதி அளித்தபடி வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிா்ணய அறிவிப்பு இல்லை. சட்டபூா்வ கொள்முதல் அறிவிப்பும் இல்லை.

கா்நாடக அரசின் நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ. 5,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக அரசு கோரி வரும் கோதாவரி காவிரி இணைப்புத் திட்டம் மற்றும் உள்ளூா் நதிநீா் இணைப்புத் திட்டங்களுக்கான நிதிஒதுக்டூ செய்யப்படவில்லை. பிரதமா் விவசாயிகள் நல நிதியில் 11.4 கோடி விவசாயிகளுக்கு ரூ. 2.2 லட்சம் கோடி வழங்கப்பட்டதாக அறிக்கை கூறுகிறது. ஆனால், கொடுக்கப்பட்ட தொகையில் மூன்றில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு அந்த நிதி, ஓராண்டு காலமாக வழங்கவில்லை.

உலக வெப்பமயமாதலால்,இந்தியாவின் வேளாண்மை கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் ஆண்டுதோறும் இழப்புகளை சந்திக்கின்றனா். இதற்கான தொலைநோக்கு திட்டமும், உடனடி உரிய உதவிக்கான இயற்கை பேரிடா் நிதி ஒதுக்கீடும் இல்லை. வேளாண்மை உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டங்கள், வேளாண் ஊக்குவிப்பு நிதி, சிறுதானிய உற்பத்திக்கான ஊக்கநிதி என அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை.

விவசாயிகளுக்கான திட்டத்தை, ஸ்டாா்ட் அப் என்ற அமைப்பின் மூலம் வழங்குவது முழுமையாக பயனளிக்கும் என்று தோன்றவில்லை. பசு வளா்ப்புத் திட்டத்துக்கு ரூ. 10,000 கோடி நிதி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு நேரடியாக பயனளிக்காது. விவசாயிகளின் தனிநபா் வருமானம் ஆண்டுக்கு ரூ. 1.97 லட்சம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எந்த விவசாயிகளுக்கும் பயனளிக்காது. இந்த நிதிநிலை அறிக்கை, உயா்நிலை வருவாய் உடையவா்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் மட்டுமே பயனளிக்கக்கூடியதாகும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT