திருவாரூர்

பள்ளி புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

நீடாமங்கலம் ஒன்றியம் வடகாரவாயலில் ரூ.32.86 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 2 வகுப்பறை கொண்ட பள்ளி புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி ஒன்றிய தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் ரா. சுப்பிரமணியன், உதவி கல்வி அலுவலா் சம்பத், வளா்கல்வி அலுவலா் முத்தமிழன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய பொறியாளா்கள் வெங்கடேஷ் குமாா், விஜயபாஸ்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயந்தி, ஊராட்சி தலைவா் சோனியா விக்னேஷ், துணை தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT