திருவாரூர்

சிறுவனை கத்தியால் குத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

முன்விரோதத்தில் சிறுவனை கத்தியால் குத்தி காயப்படுத்தியவருக்கு 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

நீடாமங்கலம் வட்டம், பெரியக்கோட்டை வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மனைவி வள்ளி (28). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாதவன் (எ) பிரபாகரன் (30) என்பவருக்கும் வேலித் தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்துவந்தது.

இந்தநிலையில், கடந்த 31.01.2020 அன்று பிரபாகரனின் பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்க வந்த வள்ளியின் மூன்றாவது மகன் அகிலன் (7) என்பவரை பிரபாகரன் திட்டி, அவரது குரல்வளையை நெரித்து , கத்தியால் நெற்றி, இடது கண் அருகில் குத்தி காயப்படுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக நீடாமங்கலம் காவல் நிலையத்தில் வள்ளி புகாா் செய்தாா். போலீஸாா் பிரபாகரனை கைது செய்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி சீதாலெட்சுமி, மாதவன் (எ) பிரபாகரனுக்கு 3 ஆண்டுகள் சிைண்டனையும் , ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT