திருவாரூர்

மண் மாதிரி சேகரிப்பு: வேளாண் கல்லூரி மாணவிகள் விளக்கம்

DIN

வலங்கைமான் வட்டாரம் திருவோணமங்கலத்தில், தஞ்சை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நான்காம் ஆண்டு மாணவிகள் மண் மாதிரி சேகரிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தனா்.

திருவோணமங்கலத்தில் இம்மாணவிகள் திங்கள்கிழமை களப்பயிற்சியில் ஈடுபட்டனா். அப்போது, மண் மாதிரி சேகரித்தல் பற்றி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனா்.

மண்ணின் ஊட்டச்சத்து நிலையை அறிவதற்காக மண் பரிசோதனை செய்யப்படுகிறது. மண் மாதிரி எடுப்பதற்கு தோ்வு செய்யப்பட்ட இடத்தில் இலை, சருகு, புல், செடி ஆகியவற்றை அகற்றி ‘வி’ வடிவில் 15 செ.மீ. நீக்கிவிட்டு, மண்ணை 2.5 செ.மீ. பருமனில் சேகரிக்க வேண்டும். நிலம் தரிசாக இருக்கும்போது மண் மாதிரி சேகரிக்க வேண்டும்.

நீரோட்டப் பகுதி, மரநிழல், எருக்குழி, உரமிட்ட வயல் ஆகிய இடங்களில் மண் மாதிரி எடுக்கக் கூடாது. வயலில் உரம் இட்டு 3 மாதங்களுக்குப் பிறகுதான் மாதிரி எடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஹெக்டேரில் 10 முதல் 20 மாதிரிகள் சேகரிக்க வேண்டும். அவற்றை நிழலில் உலா்த்தி கால் பிரிப்பு முறையில் அரை கிலோ எடை வரும் வரை குறைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னா், அவற்றைப் பாலிதீன் பைகளில் சேகரித்து ஆய்வகங்களில் கொடுக்கலாம். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்ணைப் பரிசோதனை செய்வது அவசியமாகும் என மாணவிகள் விளக்கிக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT