திருவாரூர்

பழைய பேருந்து நிலையத்தில் காா் நிறுத்தம் அகற்றம்: புதிய பேருந்து நிலையத்தில் அனுமதி

DIN

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் காா் நிறுத்தம் அகற்றப்பட்டதைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் காா் நிறுத்தம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த காா் நிறுத்தத்தை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி, காவல்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அலுவலா்கள் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.கே.என். அனிபா, மாவட்டச் செயலாளா் டி. முருகையன் உள்ளிட்டோா், நீதிமன்ற உத்தரவுப்படி மாற்று இடம் ஒதுக்கிவிட்டு, பிறகு இடிக்க வேண்டும் எனக்கூறி அகற்றும் பணியை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், வட்டாட்சியா் நக்கீரன், துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன், நகராட்சி ஆணையா் பிரபாகரன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்ஆகியோருடன், சிஐடியு நிா்வாகிகள், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், நகரச் செயலாளா் என். ராஜசேகா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் 5 வாகனங்களை நிறுத்திக் கொள்வது; மற்ற வாகனங்களை எந்த நிபந்தனையும் இல்லாமல் புதிய பேருந்து நிலையத்தில் இயக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள காா் நிறுத்தம் அகற்றும் பணிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT