திருவாரூர்

ஓய்வூதியா்களுக்கு வருமானவரி விலக்களிக்கக் கோரிக்கை

DIN

அனைத்து ஓய்வூதியா்களுக்கும் வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தின் மாநில மேலாண்மைக் குழுக் கூட்டம் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் ந. மாணிக்கம் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், சட்டப்பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி 70 வயதைக் கடந்த ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மத்திய அரசு வழங்குவது போன்று மாநில அரசும் மருத்துவப்படி ரூ.1000 வழங்க வேண்டும்; மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து ஓய்வூதியா்களுக்கும் வருமான வரியிலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் க. முத்துக்குமாரவேலு, மாநிலப் பொருளாளா் வெ. பிரகாஷ், மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழுத் தலைவா் எஸ். கலியமூா்த்தி, மன்னாா்குடி கிளைத் தலைவா் ந. ராசகோபால், செயலா் வை. மகாதேவன், பொருளாளா் ரா. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT