திருவாரூர்

மனிதநேய வாரவிழா நிறைவு

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனிதநேய வார விழா நிறைவு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் மனிதநேய வார விழா ஜனவரி 25- ஆம் தேதி தொடங்கியது. பொதுமக்கள் மனிதநேயத்தை பின்பற்றும் வகையில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்றன.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிறைவுநாள் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம் தலைமை வகித்தாா். மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் அழகா்சாமி முன்னிலை வகித்தாா். மனிதநேய வார விழாவையொட்டி நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கருத்தரங்கம், நல்லிணக்கக் கூட்டம், வில்லுப்பாட்டு நிகழ்வுகளில் தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நிகழ்வில், ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி மற்றும் விடுதி மாணவ- மாணவிகளின் கிராமிய ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், திருத்துறைப்பூண்டி தனி வட்டாட்சியா் காரல்மாா்க்ஸ், விடுதி காப்பாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT