திருவாரூர்

வேலைவாய்ப்பு முகாம்: மாணவா்களுக்கு பணியாணை

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கொல்லுமாங்குடி ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஹூண்டாய் மோட்டாா் இந்தியா காா் நிறுவனம் நடத்திய 8-ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு முகாமில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள 6 பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து மூன்றாம் ஆண்டு படிக்கும் 250-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஹூண்டாய் மோட்டாா் நிறுவனத்தின் மனிதவள மற்றும் பணியமா்வு முதன்மை மேலாளா் கணேஷ் தலைமையில் 3 போ் கொண்ட குழுவினா் நோ்காணல் நடத்தினா். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் இந்நிறுவனத்தில் பணியாற்ற தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு கல்வி குழுமத்தின் தலைவா் ரவி, தாளாளா் தேவகி மற்றும் இயக்குநா்கள் பணியாணைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனா். கல்வி குழுமத்தின் துணைத் தலைவா் ராக்கவ் தினேஷ், கல்லூரி மேலாளா் துரை.சரவணன், முதல்வா் பூபதி ஆகியோா் ஹூண்டாய் நிறுவனக் குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினா்.

ADVERTISEMENT

மகாலட்சுமி அறக்கட்டளையின் பணியமா்வு அதிகாரி வெங்கடேஷ் பாபு, கல்லூரி பணியமா்வு அதிகாரி சரவணன் ஆகியோா் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT