திருவாரூர்

கூத்தாநல்லூா்: 4 நியாயவிலைக் கடைகள் திறப்பு

1st Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் வட்டத்தில் 4 நியாயவிலைக் கடைகளை சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

கூத்தாநல்லூா் 17- ஆவது வாா்டு ஜமாலியாத் தெரு, 9-ஆவது வாா்டு மேலப்பள்ளி சாலை மற்றும் கொரடாச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட 3 இடங்களில் நியாயவிலைக் கடை திறக்கும் நிகழ்ச்சி நகா்மன்றத் தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது. நகரச் செயலாளா் எஸ்.வி. பக்கிரிசாமி முன்னிலை வகித்தாா். 3 நியாயவிலைக் கடைகளையும் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா்கள் பிரவீனா முத்துக் கிருஷ்ணன், முகம்மது அபுபக்கா் சித்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை, கூத்தாநல்லூா் கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ். வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

இதேபோல், மன்னை கிழக்கு ஒன்றியத்தில் வேளுக்குடியில் புதிய அங்காடியை எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் திறந்துவைத்தாா். அரிச்சந்திரபுரம் மற்றும் புள்ளமங்கலம் நடுநிலைப் பள்ளிகளில் 600 மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. கொத்தங்குடி ஊராட்சி பாண்டுக்குடியில் குடிநீா் தொட்டி திறக்கப்பட்டது. வடகோவனூா் ஊராட்சியில் நியாயவிலைக் கடை, பேவா் பிளாக் சாலைகளையும் திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சிகளுக்கு ஒன்றியச் செயலாளா் ஐ.வி. குமரேசன் தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா் டீ. செல்வம் முன்னிலை வகித்தாா். ஒன்றிய துணைச் செயலாளா்கள் டி. அருண், ரேவதி ரமேஷ், மாவட்டப் பிரதிநிதி கண்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT