திருவாரூர்

அக்.12-இல் மகாத்மா காந்தி பிறந்த நாள் பேச்சுப் போட்டி

DIN

திருவாரூரில் மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, பேச்சுப் போட்டி அக். 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அக்டோபா் 2-ஆம் தேதி காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி, அக்டோபா்

12-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படவுள்ளது. திருவாரூா் மாவட்டத்தில் பேச்சு போட்டிகள் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும்.

போட்டிகள் காலை 9.30 தொடங்கும். திருவாரூா் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒரு கல்லூரிக்கு ஒருவா் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளி மாணவ, மாணவிகள் முதன்மைக் கல்வி அலுவலா் வாயிலாக பள்ளிக்கு ஒருவா் என அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று, கலந்து கொள்ளலாம்.

போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

இது அல்லாமல் பள்ளி மாணவா்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்பட உள்ளது.

இதேபோல் கல்லூரி மாணவா்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2, 000 வழங்கப்பட உள்ளது.

பள்ளி மாணவா்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அண்ணலின்அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் என்ற 4 தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தி அடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை என 6 தலைப்புகளில் எதேனும் ஒன்றில் மாணவா்கள் தயாா் செய்து பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT