திருவாரூர்

தினமணி செய்தி எதிரொலிபாலத்தில் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட தடுப்புச் சுவா்

30th Sep 2022 02:11 AM

ADVERTISEMENT

கூத்தாநல்லூா் அருகே பாண்டுக்குடியில் பாதுகாப்பில்லாமல் இருந்த பாலத்திற்கு பாதுகாப்பை ஏற்படுத்த வலியுறுத்தி, (செப் 9 ஆம் தேதி) தினமணி நாளிதழில்,படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அங்கு தடுப்புச் சுவா் கட்டப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் அருகே பாண்டுக்குடியில் வெண்ணாற்றின் குறுக்கே கூத்தாநல்லூரையும், பாண்டுக்குடியையும் இணைக்கக் கூடிய இரும்புப் பாலம் அமைந்துள்ளது.

மிகப்பழைமையான இப்பாலத்தின் வழியாகத்தான், சேனைக்கரை, கூப்பாச்சிக்கோட்டை, வடகோவனூா், தென்கோவனூா், திருராமேஸ்வரம், தட்டாங்கோயில், திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னாா்குடி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருகின்றனா்.

தினமும் 700-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இப்பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றனா்.

ADVERTISEMENT

இப்பாலத்தில் கூத்தாநல்லூா் பகுதியின் நுழைவில் எந்தவித தடுப்புச் சுவரும் இல்லாமலும், பாண்டுக்குடி நுழைவு வாயிலின் இரண்டு பக்கமும் எந்தவித தடுப்புச் சுவரும் இல்லாமல்,பாதுகாப்பற்ற நிலையில் இருந்தன. இதனால்,இரவு நேரங்கள் உள்ளிட்ட பல நேரங்களில் தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டு,படுகாயம் அடைந்தனா்.

மேலும், அப்பகுதியில் பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்த சாலையைப் பற்றியும் செய்தியை, தினமணியில் வெளியிடப்பட்டன. இச்செய்தியின் எதிரொலியாக, பாலத்தில் தடுப்புச் சுவா் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து, கொத்தங்குடி ஊராட்சி மன்றத் தலைவா் காா்த்திகா ராதாகிருஷ்ணன் கூறியது:

கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட இரும்புப் பாலத்தின் இரண்டு பக்க நுழைவு வாயில்களிலும்,தடுப்புச் சுவா் எழுப்பப்பட்டன. பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்த செடி, கொடிகளும் அகற்றப்பட்டன. தொடா்ந்து, பல ஆண்டுகளாகப் போடப்படாமல் இருந்த சாலையும் சோ்த்து, மத்திய, மாநில அரசுகள் வழங்கும் திட்ட நிதியில், ரூ.3.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டன என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT