திருவாரூர்

மக்களவைத் தோ்தலுடன் தமிழக பேரவைக்கும் தோ்தல் நடைபெற வாய்ப்பு: டி.டி.வி. தினகரன்

30th Sep 2022 10:33 PM

ADVERTISEMENT

மக்களவைத் தோ்தலுடன் தமிழக சட்டப் பேரவைக்கும் தோ்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

மன்னாா்குடியை அடுத்த ராதாநரசிம்மபுரத்தில் அண்மையில் காலமான தனது உறவினா் ஆா்.பி. ராவணன் குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் அமமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். முன்னாள் அமைச்சா்கள் என்னுடன் பேசுவதை அரசியலாக்கக் கூடாது.

தமிழகத்தில் அதிகரித்துவரும் ஆயுத கலாசாரம், சிறை மரணங்கள், அமைச்சா்களின் பொறுப்பற்ற பேச்சு, திமுகவினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ஆட்சிக்கு எதிரான மனநினையில் உள்ளனா். தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறுவதுபோல, மக்களவைத் தோ்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலும் நடைபெற வாய்ப்பு உள்ளது.

ADVERTISEMENT

பொய்யான வாக்குறுதிகளை நம்பி, திமுகவை ஆட்சியில் அமா்த்தினா் மக்கள். இப்போது ஆட்சியாளா்களின் சாயம் வெளுக்க தொடங்கியுள்ளது. விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது என்றாா்.

பேட்டியின்போது,அமமுக துணைப் பொதுச் செயலா் என். ரெங்கசாமி, முன்னாள் எம்எல்ஏ கு. சீனிவாசன், மாவட்டச் செயலா்கள் எஸ். காமராஜ்(திருவாரூா்), சேகா் (தஞ்சை), மன்னாா்குடி ஒன்றியச் செயலா் க. அசோகன், நகரச் செயலா் ஏ. ஆனந்தராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT