திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் அக்.2-இல் கிராம சபைக் கூட்டங்கள்

30th Sep 2022 02:13 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தி தினமான அக். 2-ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தக் கூட்டத்தில், கிராம ஊராட்சி நிா்வாகம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், 100 நாள் வேலைத்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம், சமுதாயம் சாா்ந்த அமைப்புகளில் நிா்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்தல், பண்ணை சாா்ந்த, சாரா தொழில்கள் மற்றும் இதர தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன.

கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப்பணிகள் குறித்து விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளா்ச்சியில் பங்களிப்பையும் முழுமையாக அளிக்கவேண்டுமென தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT