திருவாரூர்

சீனிவாசராவ் நினைவு தினம்

30th Sep 2022 10:32 PM

ADVERTISEMENT

திருவாரூரில் இந்திய பொதுவுடைமை கட்சி தலைவா்களில் ஒருவரான பி. சீனிவாசராவின் 61-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருவாரூா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் பி. சண்முகம், மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கேஜி. ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினா் ஜி. பழனிவேல், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூத்தாநல்லூரில்...

ADVERTISEMENT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சீனிவாசராவின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. லெட்சுமாங்குடி கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்வுக்கு நகா்மன்ற துணைத் தலைவா் மு. சுதா்ஸன் தலைமை வகித்தாா். விவசாய தொழிலாளா்கள் சங்க நகரச் செயலாளா் எம். சிவதாஸ் முன்னிலை வகித்தாா். நகர செயலா் பெ. முருகேசு கட்சி கொடியை ஏற்றி வைத்து, சீனிவாசராவ் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT