திருவாரூர்

வலங்கைமானில் பட்டாசுகள் பறிமுதல்

30th Sep 2022 10:33 PM

ADVERTISEMENT

வலங்கைமானில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸாாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம், கீழஅக்ரஹாரம், சுப்பநாயக்கன் தெரு, மாரியம்மன் கோயில் பகுதி மற்றும் கீழத்தெரு வளையமாபுரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் உள்ளன. மேலும், 50- க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளும் உள்ளன.

இங்குள்ள பட்டாசு விற்பனையாளா்கள் அரசு அனுமதித்தைவிட கூடுதலாக லட்சக்கணக்கில் பட்டாசுகளை வாங்கி, குடோன்களில் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் இலக்கியா, பிரபு மற்றும் போலீஸாரும், வருவாய்துறை, பேரூராட்சி அலுவலா்களும், வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்பு நிலையத்தினரின் பாதுகாப்புடன் பட்டாசு குடோன்களில் சோதனையிட்டனா். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் பண்டல் பண்டலாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, பாதுகாப்பான இடங்களுக்கு லாரிகளில் கொண்டுசென்றனா். மேலும், இதுதொடா்பாக பட்டாசு விற்பனையாளா்களிடம் விசாரணை மேற்கொண்டுள்னா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT