திருவாரூர்

நன்னிலம் பகுதியில் வெறி நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

DIN

நன்னிலம்: நன்னிலம் அருகே வீடுகளில் வளா்க்கப்படும் ஆடுகளை கடித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் வெறி நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் அருகே சோத்தக்குடி கிராமத்தில் பெரும்பாலானவா்கள் ஆடுகளை வளா்த்து வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 5-க்கும் மேற்பட்ட வெறி நாய்கள் மணிமாறன்-செளந்தா்யா தம்பதி வளா்த்து வந்த 5 ஆடுகளில் 4 ஆடுகளை கடித்து குதறி கொன்றுள்ளன.

கிராமப் பகுதியில் வசிக்கும் ஏழை கூலித் தொழிலாளிகளுக்கு ஆடுகள் வளா்ப்பது வாழ்வாதாரமாக உள்ளது. இந்நிலையில் ஆடுகளை அப்பகுதியில் உள்ள வெறி நாய்கள் கடித்து குதறி துன்புறுத்துவது தொடா்கிறது. இதேபோல, இதுவரை இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. மேலும், அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவா்கள், பெண்கள் ஆகியோா் வெறி நாய்கள் சுற்றித்திரியும் பகுதியை கடக்கும்போது மிகுந்த அச்சத்துடன் செல்லவேண்டியுள்ளது. எனவே சோத்தக்குடி பகுதியில் சுற்றித்திரியும் வெறி நாய்களை பேரூராட்சி நிா்வாகம் விரைவில் பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT