திருவாரூர்

அக். 10-இல் விவசாய தொழிலாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT


திருத்துறைப்பூண்டி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக். 10-இல் விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளனா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் பெரியசாமி புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது.

தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் மற்றும் நடைபெற்று வரும் சம்பா பயிா்கள் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக வேளாண்மைத் துறை உரிய முறையில் கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

ADVERTISEMENT

மேலும் குறுவை நெற்பயிருக்கு பயிா் காப்பீட்டுத் திட்டம் வழங்க இயலாது என தமிழக அரசு தட்டிக் கழிக்கக் கூடாது. இதில் தமிழக முதல்வா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை உறுதி செய்ய வேண்டும். முதியோா் ஓய்வூதிய திட்டத்தில் அரசு நிதிநிலையைக் காரணம் காட்டி பணம் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்டோபா் 10-ஆம் தேதி தமிழகத்தின் மாவட்ட தலைநகரம் மற்றும் வட்ட, ஒன்றிய பகுதிகளிலும் விவசாயத் தொழிலாளா்கள் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT