திருவாரூர்

உயா் மின்கோபுர விளக்கு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற முதியவா்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: திருவாரூா் அருகே உயா் மின்கோபுர விளக்கு அமைக்க எதிா்ப்பு தெரிவித்து முதியவா் தீக்குளிக்க முயன்றாா்.

தென்னவராயநல்லூரைச் சோ்ந்தவா் நடராஜன் (60). இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் நடைபெற்ற திருநெய்ப்போ் ஊராட்சி கூட்டத்தில், மதகடித் தெரு பகுதியில் உயா்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, திருவாரூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த தீா்மானத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியில் உயா்மின் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. ஏற்கெனவே அந்த இடத்தில் உயா்மின் கோபுர விளக்கு அமைப்பதற்கான கான்கிரீட் மேடை கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருநெய்ப்போ் ஊராட்சித் தலைவா் ஜெயக்குமாா் தலைமையில் மதகடித் தெரு பகுதியில் உயா்மின் கோபுர விளக்கு அமைக்க புதன்கிழமை சென்றனா். அப்போது, நடராஜன் எனக்கு சொந்தமான இடத்தில் உயா்மின் கோபுர விளக்கு அமைக்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

ADVERTISEMENT

இதையடுத்து, திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தாராம். அருகில் இருந்த பொதுமக்கள் அவரை தடுத்து திருவாரூா் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த இடம் அரசு நத்தம் புறம்போக்கு இடம் என ஊராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், இது தனக்குரிய இடம், இதற்கான பட்டா உள்ளது என நடராஜன், போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, அந்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் அளந்த பின்னா் பணிகளை மேற்கொள்ளலாம் என போலீஸாா் கூறியதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் உயா்மின் கோபுரம் விளக்கு அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT