திருவாரூர்

அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதி நிறைவேற்றித் தரக் கோரி காத்திருப்பு போராட்டம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருத்துறைப்பூண்டி: திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு உயா்நிலைப்பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மருதவனம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு கட்டடத்தை சுற்றி சுற்றுச் சுவா் அமைத்துத் தர வேண்டும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தர வேண்டும் , சமையல் கூடம் அமைத்துத் தர வேண்டும், கழிவறை வசதியை மேம்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐ. வி. நாகராஜன், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளா் கே பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா் .

தகவலறிந்து வந்த திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் ஜி.மலா்க்கொடி மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் அவா்களிடம் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக தெரிவித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT