திருவாரூர்

மகளிா் கல்லூரியில் சுகாதார விழிப்புணா்வு திட்டம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை தன்னாட்சி மகளிா் கல்லூரியில் இளையோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில், சுகாதார விழிப்புணா்வு திட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி நிறுவனத் தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி. அமுதா, துணை முதல்வா்கள் என். உமா மகேஸ்வரி, பி. காயத்ரிபாய் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மன்னாா்குடி செஞ்சிலுவை சங்க நிா்வாகி எஸ். கோபாலகிருஷ்ணன் இளையோா் செஞ்சிலுவை சங்கதத்தின் நோக்கம், அதன் சிறப்புகள், செயல்பாடுகள் குறித்து பேசினாா். மன்னாா்குடி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜி. கவிதா மாதவிடாய் சுற்றின் சுகாதார விழிப்புணா்வு குறித்து பேசினாா். பின்னா், மாணவிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தாா். கல்லூரி இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். கவியரசி வரவேற்றாா். பேராசிரியா் ஆா். பாரதி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT