திருவாரூர்

ஊக்கத்தொகை கோரி சாலை மறியல்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: தீபாவளி ஊக்கத்தொகை வழங்கக்கோரி, திருவாரூரில் டாஸ்மாக் ஒப்பந்தத் தொழிலாளா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

டாஸ்மாக் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ரூ. 8,400 ஊக்கத்தொகை வழங்க வேண்டும், லாரியில் கொண்டு செல்லும்போது மது பாட்டில்கள் உடைந்து போனால் அதற்குரிய தொகையை ஒப்பந்தத் தொழிலாளா்களின் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, மண்டல மேலாளரிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, சிஐடியு மாவட்டச் செயலாளா் முருகையன் தலைமையில் டாஸ்மாக் ஒப்பந்தத் தொழிலாளா்கள் திருவாரூா்- மன்னாா்குடி சாலையில் கூட்டுறவு நகா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

போராட்டக்காரா்களிடம் போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT