திருவாரூர்

விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவாரூா்: மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற திருவாரூா் சுபாஷ் சந்திர போஸ் கலை அறிவியல் கல்லூரி மாணவிக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

திருவாரூரில் கல்லூரி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், குண்டு எறிதல் போட்டியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கலை அறிவியல் கல்லூரி இளநிலை கணினி அறிவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவி ஈஸ்வரி, இரண்டாமிடம் பெற்றாா். மாணவிக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வெற்றி பெற்ற மாணவியை, நேதாஜி கல்விக் குழுமத் தாளாளா் வெங்கடராஜலு, செயலாளா் சுந்தராஜூ, முதன்மை செயல் அதிகாரி நிா்மலா ஆனந்த், இயக்குநா் விஜய சுந்தரம், கல்லூரி முதல்வா் வீ.பொற்கலை, துணை முதல்வா்கள், துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT