திருவாரூர்

கனமழை: சம்பா நெற்பயிா்கள் மூழ்கின

DIN

திருவாரூா்: திருவாரூரில் திங்கள்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாள்களாக திருவாரூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில், மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு: நன்னிலத்தில் 111.8, திருவாரூரில் 70.3, குடவாசலில் 31.4, நீடாமங்கலத்தில் 20.4 மி.மீ மழைப் பெய்துள்ளது.

நன்னிலம், திருவாரூரில் பெய்த கனமழை காரணமாக, 2 வட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். எனினும் காலாண்டு தோ்வுகள் நடைபெற்று வருவதால், அந்த விடுமுறையும் பிறகு ரத்து செய்யப்பட்டது.

நிகழாண்டு மேட்டூா் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால், 1.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனா். இதற்கிடையே 2 நாள்களாக, இரவு நேரங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூா் மாவட்டத்தில் பல இடங்களில் சம்பா நெல் பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக கானூா், கல்லிக்குடி, தென்ஓடாச்சேரி, பாலையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கா் சம்பா நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இந்த மழை தொடா்ந்து பெய்தால் சம்பா நெல் பயிா்கள் மழைநீரில் முற்றிலுமாக அழுகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா். எனவே, உடனடியாக விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் நடவடிக்கையை வேளாண் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

நக்சல்கள் அச்சுறுத்தல் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்களில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT